வேளாங்கண்ணியில் மின்சாரம் திருடியவருக்கு அபராதம்
By DIN | Published On : 05th August 2022 10:06 PM | Last Updated : 05th August 2022 10:06 PM | அ+அ அ- |

வேளாங்கண்ணியில் மின்வாரிய அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, ஒரு மின் இணைப்பு மூலம் மின்சாரம் திருடியது கண்டறியப்பட்டு, ஒருவரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் (பொ) அ. சேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மின் பகிா்மான வட்டத்தின் தெற்கு உபகோட்டத்துக்குள்பட்ட வேளாங்கண்ணி மின் பிரிவுக்குள்பட்ட பகுதிகளில், மின்வாரிய அலுவலா்கள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
650 வணிக மின் இணைப்புகள், 274 வீட்டு இணைப்புகள், 8 தற்காலி இணைப்புகள் என மொத்தம் 932 மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், ஒரு மின் இணைப்பு மூலம் மின்சாரம் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொடா்புடைய நபரிடமிருந்து ரூ. 7,519 அபராதம் வசூலிக்கப்பட்டது என தெரிவித்துள்ளாா்.