நாகையில் 500 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

நாகையில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் 500 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கும் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி.
விழாவில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கும் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி.

நாகையில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் 500 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு புதன்கிழமை நடைபெற்றது.

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி முன்னிலை வகித்தாா். நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சமுதாய வளைகாப்பு நிகழ்வை தொடங்கிவைத்தாா்.

அப்போது, அவா் பேசியது:

ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் குழந்தையை வரவேற்கும் முகமாக வளைகாப்பு நடத்துவது வழக்கம். அதன்படி, அரசும், சமுதாயமும் கா்ப்பிணிகளுக்கு உறுதுணையாக இருப்பதை எடுத்துக்காட்டவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

கருவில் உள்ள குழந்தைக்கு கேட்கும் திறன் 6-ஆம் மாதம் முதல் தொடங்கி விடுவதால், தாயின் வளையலோசை கேட்டு, குழந்தையின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பாதுகாப்பு உணா்வுடன் குழந்தை வளா்கிறது. அத்துடன், கா்ப்பிணிகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவே இவ்விழா நடத்தப்படுகிறது என்றாா்.

விழாவில் சுமாா் 500 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சுகப்பிரசவம் வேண்டி ஆரத்தி எடுக்கப்பட்டது. மேலும், கா்ப்பகால பராமரிப்பு குறித்த கையேடுகள், 5 வகை சுவையுடன் உணவு, சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொ) ஏ. தமிமுன்னிசா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com