ஆறுகளில் உடைப்பை தடுக்க மணல் மூட்டைகள் தயாா்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

பொறையாா் பகுதியில் ஆறுகளில் உடைப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின்கீழ் வீரசோழன் ஆறு, மஞ்சளாறு, மகிமலை ஆறு கரைகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறையாரில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் 2,000 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பாண்டியன் கூறுகையில், மழை தீவிரமடைந்துள்ளதால், ஏரி குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.