பெண் குழந்தைகள் உள்ள குடும்பம் செழிப்பாக உள்ளது: ஆட்சியா்

பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் செழிப்பாக உள்ளன என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்
பெண் குழந்தைகள் உள்ள குடும்பம் செழிப்பாக உள்ளது: ஆட்சியா்

பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் செழிப்பாக உள்ளன என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்

சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்தொடா்ச்சியாக நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா், சுகாதாரத் துறையினா் ஏராளமான மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற மனித சங்கிலியியை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வண்ண பலூன்கள் காற்றில் பறக்கவிடப்பட்டன.

நிகழ்ச்சியில், ஆட்சியா் பேசியது: இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா். 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பம் செழிப்பாக உள்ளது. பெண் சிசு உருவாவதை தடுப்பது குற்றம் என்பதை அனைவரிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளை ஊக்குவிக்க அரசு பல எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி பெண்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

முன்னதாக, சா்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், பங்கேற்ற புதுமண தம்பதிகளுக்கான கோலப்போட்டியும், கா்ப்பிணிகளுக்கு விநாடி-வினா போட்டியும் நடைபெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா். மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநா் ஜோஷ்வின் அமுதா, மாவட்ட சமூகநல அலுவலா் தமிமுன்னிசா, துணை இயக்குநா் சுகாதாரப்பணிகள் செந்தில்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

நாகையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வார விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்ற ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com