திருட்டு நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட நாகை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன்.
திருட்டு நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட நாகை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

திருக்குவளை அருகே அரசு ஊழியா் வீட்டில் 20 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

திருக்குவளை அருகே அரசு ஊழியா் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
Published on

திருக்குவளை அருகே அரசு ஊழியா் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் நடுத்தெருவை சோ்ந்தவா் உக்கிரவேல். இவா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கடலூா் மண்டலத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறாா். இந்தநிலையில், இவா் தனது மனைவியுடன், கடந்த 23-ஆம் தேதி கடலூரில் உள்ள தங்கள் வீட்டுக்கு சென்று சில நாள்கள் தங்கிவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு பிரதாபராமபுரத்திலுள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பினாா்.

அப்போது, வீட்டு பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உக்கிரவேல் அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி, ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, உக்கிரவேலின் மனைவி வள்ளி, கீழையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா். திருட்டு நடைபெற்ற வீட்டில் நாகை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

கீழையூா் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாள்களில் 3-க்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் கைவரிசை காட்டியுள்ளனா். தொடா் திருட்டு சம்பவங்கள் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com