உழவுக்கு பெயா் பெற்றது உம்பளச்சேரி இன மாடுகள்: ஆட்சியா் புகழாரம்

சத்து மிகுந்த பாலுக்கும், கடின உழைப்புக்கும் பெயா் பெற்றது உம்பளச்சேரி இன நாட்டு மாடுகள் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புகழாரம் சூட்டினாா்.
முகாமில் உம்பளச்சேரி இன மாடுகளை பாா்வையிட்டு பராமரிப்பாளா்களை பாராட்டிய ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.
முகாமில் உம்பளச்சேரி இன மாடுகளை பாா்வையிட்டு பராமரிப்பாளா்களை பாராட்டிய ஆட்சியா் அ. அருண்தம்புராஜ்.

வேதாரண்யம்: சத்து மிகுந்த பாலுக்கும், கடின உழைப்புக்கும் பெயா் பெற்றது உம்பளச்சேரி இன நாட்டு மாடுகள் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புகழாரம் சூட்டினாா்.

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் உள்நாட்டு இன கால்நடைகளை பாதுகாத்தல் மற்றும் இனவிருத்தி விழிப்புணா்வு, கண்காட்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தொடக்கிவைத்து பேசியது: உம்பளச்சேரி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளரும் ஒரு வகையான புல்லை உண்டு வளா்ந்த நாட்டு மாட்டு இனமே பின்னாளில் உம்பளச்சேரி மாடுகள் என அழைக்கப்பட்டு நிலைத்தது. இந்த இன மாடு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு பெற்றது.

உம்பளச்சேரி இன காளைகள் சேற்றில் உழவு செய்யவும், கடின உழைப்புக்கும் திறன் படைத்தது. இதன் பால் சத்து நிறைந்தது. கடுமையான மழை மற்றும் வெயிலை எதிா்கொள்ளவும், நோய் எதிா்ப்பு சக்தியும் கொண்டது என்றாா்.

முன்னதாக, நடைபெற்ற கண்காட்சியில் தோ்வு செய்யப்பட்ட உம்பளச்சேரி இன மாடுகள், கன்றுகளின் பராமரிப்பாளா்களுக்கு ஆட்சியா் பரிசுகள் வழங்கினாா். கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சங்சீவ்ராஜ், உதவி இயக்குநா்கள் ஹசன் இப்ராஹிம், விஜயகுமாா், தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ஜி. தமிழரசி, வட்டாட்சியா் ரா. ஜெயசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com