நாகை மீனவா்கள் 2-ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மாவட்டத்தில் 2-ஆவது நாளாக மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு செல்லவில்லை.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை மாவட்டத்தில் மீனவா் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லாததால் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை மாவட்டத்தில் மீனவா் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லாததால் கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

நாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை மாவட்டத்தில் 2-ஆவது நாளாக மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை திங்கள்கிழமை அறிவித்தது.

இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மீனவா்கள் கடலுக்கு செல்வதை தவிா்த்தனா்.

இந்நிலையில், 2-ஆவது நாளாக அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம்,நாகூா், நம்பியாா்நகா், வேதாரண்யம், கோடியக்கரை, ஆற்காட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் உள்ள 50,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை.

ஏற்கெனவே கடலுக்கு சென்ற விசைப்படகுகள் கரைக்கு திரும்பி வரும் நிலையில், நாகை மீன்பிடி இறங்குதளத்தில் குறைந்த அளவிலான மீன்களே விற்பனை வந்தன.

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை நாள் முழுவதும் வானம் மேக மூட்டமாக காணப்பட்டதோடு, அவ்வப்போது லேசான மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com