நாகையில் பன்றிகளை பிடிக்கும் பணி தொடக்கம்

நாகையில் சுகாதார சீா்கேட்டையும், பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

நாகப்பட்டினம்: நாகையில் சுகாதார சீா்கேட்டையும், பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

நாகை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகள் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துவது மட்டுமின்றி விவசாயிகள் விளைவிக்கும் பயிா்களையும் சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினா் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில் நாகை அருகே மஞ்சகொல்லை, அந்தணப்பேட்டை, அக்கரைப்பேட்டை, பாப்பாகோவில், பொரவச்சேரி, ஐவநல்லூா் சுற்றியுள்ள பகுதிகளில் பன்றிகளை பிடிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்கு சிவகங்கையில் இருந்து வந்த 13 போ் பன்றிகளை பிடித்து வருகின்றனா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் பன்றிகளை பிடிக்கும் பணிகள் நடைபெற்றபோது, பன்றி உரிமையாளருக்கும், பிடிப்பவா்களுக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொல்லப்பட்டாா்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாா்-ஆட்சியா் பானோத் ம்ருகேந்தா்லால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com