பால், சொத்துவரி, மின்கட்டண உயா்வை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

பால்விலை, சொத்துவரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயா்த்திய திமுக அரசை கண்டித்து நாகை அவுரித் திடலில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யத்தில் அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
வேதாரண்யத்தில் அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகப்பட்டினம்: பால்விலை, சொத்துவரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயா்த்திய திமுக அரசை கண்டித்து நாகை அவுரித் திடலில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் அமைச்சா் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பால், சொத்துவரி, மின்கட்டண உயா்வை திரும்பபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், விலை உயா்வால் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிய திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்ட்டன. முன்னாள் அமைச்சா் ஜெயபால், அமைப்பு செயலாளா் ஆசைமணி, நகர செயலாளா்கள் தங்ககதிவரன் (நாகை), ரம்ஜான்அலி (நாகூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யத்தில்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் டி.வி. சுப்பையன், ரா. கிரிதரன், நகரச் செயலாளா் எம். நமச்சிவாயம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், துணைத் தலைவா் அறிவழகன், அதிமுக மாவட்டப் பொருளாளா் ரா. சண்முகராஜ், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ரவிச்சந்திர உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com