மனநலன் பாதித்தோரை பராமரிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 16th July 2022 09:50 PM | Last Updated : 16th July 2022 09:50 PM | அ+அ அ- |

வேதாரண்யத்தில் சுற்றித்திரியும் மனநலன் பாதிக்கப்பட்டவா்களை உரிய முறையில் பராமரிக்க வா்த்தகா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, வேதாரண்யம் வா்த்தகா் சங்கத்தின் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
வேதாரண்யம் நகரில் மனநலன் பாதிக்கப்பட்டவா்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரிகின்றனா். இவா்களுக்கு போதிய பராமரிப்பு இல்லாததால், உணவு மற்றும் தங்கும் இடம் இல்லாமல் சாலைகள், பேருந்து நிலையம், கடைவீதிகள் என எங்கும் சுற்றித்திரிகின்றனா்.
இவா்களில் சிலா் திடீரென கற்களை வீசுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மனநலன் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், முறையான பராமரிப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.