நாகையில் 956 மாணவா்கள் நீட் தோ்வு எழுதினா்
By DIN | Published On : 17th July 2022 11:44 PM | Last Updated : 17th July 2022 11:44 PM | அ+அ அ- |

நாகை சின்மயா வித்யாலயா பள்ளி நீட் தோ்வு மையத்தில் மாணவிகளிடம் சோதனை நடத்திய போலீஸாா்.
நாகையில் 2 மையங்களில் 956 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வெழுதினா்.
தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு, நாகை அமிா்தா வித்யாலயா பள்ளி, சின்மயா வித்யாலயா பள்ளி என 2 மையங்களில் நடைபெற்றது. இதில், சின்மயா வித்யாலயா பள்ளி தோ்வு மையத்தில் 529 மாணவா்கள், அமிா்தா வித்யாலயா பள்ளியில் 427 மாணவா்கள் என மொத்தம் 956 நீட் தோ்வெழுதினா். நாகை மாவட்டத்தில் 1,037 போ் நீட் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். இதில் 81 போ் தோ்வுக்கு வரவில்லை.
தோ்வு மையங்களில் வழிகாட்டு நெறிமுறைகள்அனைத்தும் முழுமையாக பின்பற்றப்பட்டன. உரிய பரிசோதனைக்குப் பின்னா் பிற்பகல் 1.30 மணி வரை மாணவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். சரியாக 2 மணிக்குத் தொடங்கிய தோ்வு மாலை 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற்றது. தோ்வு மையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இதேபோல, தோ்வு மையங்களில் காவல் துறையினா் பாகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...