செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு போட்டி
By DIN | Published On : 22nd July 2022 03:31 AM | Last Updated : 22nd July 2022 03:31 AM | அ+அ அ- |

கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்டியில் பள்ளி மாணவா்களுக்கு இடையேயான விழிப்புணா்வு சதுரங்க போட்டிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.
சென்னை மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, நாகை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவா்களுக்கு இடையேயான சதுரங்க போட்டி நடைபெற்றது.திமுக ஒன்றிய கழக செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் பங்கேற்று போட்டியினை தொடங்கி வைத்தாா்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவா் மு.பா.ஞானசேகரன், வேளாங்கண்ணி பேரூா் கழக செயலாளா் மரிய சாா்லஸ்,சமூக ஆா்வலா் ஓ.எஸ்.இப்ராஹிம் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...