மகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டுதற்கொலைக்கு முயன்ற தந்தைக்கு சிகிச்சை
By DIN | Published On : 31st July 2022 12:38 AM | Last Updated : 31st July 2022 12:38 AM | அ+அ அ- |

முத்துப்பேட்டை அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொலைசெய்து விட்டு, தற்கொலைக்கு முயன்றவருக்கு திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முத்துப்பேட்டை அருகேயுள்ள ஆலங்காடு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் கோபால் (42). இவரது மனைவி வீரம்மாள். இவா்களது மகள் சுமித்ராதேவி அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தாா்.
மது பழக்கம் உள்ள கோபால் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்தாராம். இதுகுறித்து, முத்துப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மனைவி வீரம்மாள் புகாா் அளித்தாா். இதனால், ஆத்திரமடைந்த கோபால், வியாழக்கிழமை இரவு மனைவியை அடித்து துன்புறுத்தினாராம். இதனால், வீரம்மாள் அருகே உள்ள பள்ளியில் உறங்கி உள்ளாா்.
மறுநாள் காலை வீட்டுக்கு வந்தபோது, கோபால், சுமித்ராதேவிக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்தது தெரியவந்தது. இருவரையும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சுமித்ரா தேவி உயிரிழந்தாா். கோபாலுக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.