பருத்தியில் இலை சுருட்டுப்புழு தாக்குதல்: விவசாயிகள் கவலை
By DIN | Published On : 09th June 2022 01:18 AM | Last Updated : 09th June 2022 01:18 AM | அ+அ அ- |

பூச்சித்தாக்குதலுக்குள்ளான பருத்தி செடி.
தரங்கம்பாடி வட்டத்தில் பருத்தி சாகுபடியில் இலை சுருட்டுப் புழு, வெள்ளை நோய் தாக்குதல் காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஆக்கூா், மேமாத்தூா், திருவிளையாட்டம், திருவிடைக்கழி, காலகஸ்திநாதபுரம், நல்லாடை, கீழையூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 2 ஆயிரத்தும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி சாகுடி செய்துள்ளனா். பருத்தி சாகுபடியில் தற்போது பூ மற்றும் பிஞ்சுகள் வைத்தும் சில இடங்களில் பஞ்சு அறுவடையும் நடைபெறுகின்றன.
பருவம் தவறிய மழை, கடுமையான வெயில் காரணமாக தற்போது பருத்தி சாகுபடியில் இளை சுருட்டுப் புழு, இளைபேன், வெள்ளை நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் செடியில் இலைகள் கருகி பூ பிஞ்சுகள் சேதமடைவதால், மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே, வேளாண் அலுவலா்கள் நோய்த் தாக்குதலை கண்டறிந்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்குவதுடன், உரம், மருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.