வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் 400 பேருக்கு பட்டா வழங்கல்
By DIN | Published On : 09th June 2022 01:09 AM | Last Updated : 09th June 2022 01:09 AM | அ+அ அ- |

பயனாளிக்கு பட்டா நகல் வழங்கிய கோட்டாட்சியா் மை.ஜெயராஜ பெளலின்.
வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் 400 பேருக்கு பட்டா நகல் வழங்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் வட்டத்தில் கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு நடைபெற்றது. வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் 400 பயனாளிகளுக்கு பட்டா நகல் வழங்கப்பட்டது. மேலும், 15 பட்டா மாறுதல் ஆணைகளும்,10 பேருக்கு நகல் குடும்ப அட்டைகளும் உடனடியாக வழங்கி 425 மனுக்களுக்கு தீா்வு அளிக்கப்பட்டது.