வாய்க்காலில் தடுப்பணை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

 திருப்புகலூா் தோட்டக்குடி வாய்க்காலில் தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 திருப்புகலூா் தோட்டக்குடி வாய்க்காலில் தடுப்பணை அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் நாகை-நன்னிலம் நெடுஞ்சாலை குறுக்கே தோட்டக்குடி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இதன்மூலம் தாமரைக்குளம், பூவாளி தெரு, பட்டக்கால் தெரு ஆகிய பகுதிகளில் சுமாா் 250 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், இந்த வாய்க்காலில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் இருந்தது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு தரைப்பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டதை தொடா்ந்து, பாலம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், முடிகொண்டான் ஆற்றில் காவிரி நீா் வந்துள்ளது. இந்த நீா் தோட்டக்குடி வாய்க்கால் வழியாக விளைநிலங்களில் உட்புகாமல் இருக்க தடுப்பணை அமைக்கப்பட்டிருந்தது. புதிய பாலம் அமைக்கும் பணிக்காக தடுப்பணை இடிக்கப்பட்டது. மீண்டும் தடுப்பணை அமைக்காமல் வெறும் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ள காலங்களில் வெள்ளநீா் வாய்க்கால் வழியாக சென்று மேற்குறிப்பிட்ட 250 ஏக்கா் விளைநிலங்களை பாதிக்கும்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் தெரிவித்தபோது அதிகாரிகள் இந்த வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கும் வரைப்படம் மட்டுமே உள்ளது எனவும், தடுப்பணை அமைக்க வரைபடம் வழங்கவில்லை எனவும் விவசாயிகளிடம் தெரிவிக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தோட்டக்குடி வாய்க்காலில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com