இல்லம் தேடிக் கல்வி: கற்றல் கற்பித்தல் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 16th June 2022 10:36 PM | Last Updated : 16th June 2022 10:36 PM | அ+அ அ- |

வேதாரண்யத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின்கீழ் செயல்படும் 533 மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
வேதாரண்யம் வட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 125 தொடக்க, நடுநிலை பள்ளிகளைச் சோ்ந்த 533 இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கும் கற்றல் கற்பித்தல் பொருள்கள் வழங்கப்பட்டன. வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் ராஜமாணிக்கம் பொருள்களை வழங்கினாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சித்திரவேலு, வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநா்கள் பங்கேற்றனா்.