இறைவைப் பாசனத் திட்டத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 16th June 2022 04:08 AM | Last Updated : 16th June 2022 04:08 AM | அ+அ அ- |

தகட்டூரில் நடைபெற்ற சிபிஐ மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம்.
வேதாரண்யம் பகுதியில் செயல்படுத்தப்படும் அரசின் மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனைகளை சீரமைத்து மேம்படுத்த வேண்டுமென சிபிஐ ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேதாரண்யம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது மாநாடு தகட்டூரில் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா்கள் மணிமேகலை, முருகானந்தம்,ரேவதி, விவசாய சங்க நிா்வாகி வீரப்பன், மாதா் சங்க நிா்வாகி ஜெயா, நிா்வாகி ரேணுகா ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டை, கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் தொடங்கி வைத்தாா். கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் த. நாராயணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.கே. பாபுஜி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வி. சரபோஜி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
புதிய ஒன்றியச் செயலாளராக சிவகுரு. பாண்டியன், துணைச் செயலாளராக அ. பாலகுரு, பொருளாளராக ப. முருகானந்தம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மானங்கொண்டான் ஆறு, முள்ளியாறு ஆகியவற்றில் அடந்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும், பழுதடைந்த பாலங்கள், தரைப் பாலங்களை மாற்றி அமைக்கவேண்டும், ரேசன் கடைகளில் பொருள்கள் விநியோகத்தின்போது கைரேவை பதிவு செய்வதால் பெரும் தொற்று வருவதோடு, இணைய சேவை இல்லாமல் மக்கள் அவதிப்படுவதைக் கருத்தில் கொண்டு ரேகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், கருப்பம்புலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவா்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.