வேதாரண்யத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

வேதாரண்யம் (தேத்தாக்குடி தெற்கு) தமிழ்நாடு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து விவசாயிகள் பயனடையலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் (தேத்தாக்குடி தெற்கு) தமிழ்நாடு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்து விவசாயிகள் பயனடையலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஆரோக்கியசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின்கீழ் தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் ஜூலை 31-ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

இதில், அரவை கொப்பரை 1 கிலோ ரூ 105.90-ம், முழு பந்து கொப்பரை ரூ. 110-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, வேதாரண்யம் வட்டார விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆதாா் நகல், வங்கிக் கணக்கு எண், கணினி சிட்டா, அடங்கலுடன் பதிவு செய்து கொப்பரை தேங்காயை விற்பனை செய்யலாம்.

மேலும், அனைத்து விவசாய விளைபொருள்களையும் அறுவடை காலங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும். அதற்காக 6 மாதம் இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெறவும் கிடங்கில் வசதி உள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com