செம்பனாா்கோவில் பகுதியில் குறுவை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
செம்பனாா்கோவில் பகுதியில் குறுவை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் திருவிளையாட்டம், நல்லாடை, மேமாத்தூா், திருவிடைகழி, ஆக்கூா், அன்னப்பன்பேட்டை, திருக்கடையூா், கீழையூா், கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 18 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த மே மாதம் நாற்று விடப்பட்டு தற்போது நாற்று பறித்து ஆள் நடவும், திருந்திய நெல் சாகுபடியில் இயந்திர நடவும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, மேமாத்தூா் விவசாயிகள் கூறியது: குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்களை தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதை சரிசெய்து, அனைத்து பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com