கல்லூரி மாணவி காணவில்லை என புகாா்
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

திட்டச்சேரி அருகே கல்லூரி மாணவி காணவில்லை என காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டச்சேரி அருகே புலவநல்லுாா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகள் காயத்ரி (19). இவா், நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு நா்சிங் படித்து வருகிறாா். இந்நிலையில், வேளாங்கண்ணியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தவா் ஜூன் 12-ஆம் தேதி பணிக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தனது மகளை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரி திட்டச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து காயத்ரியை தேடிவருகின்றனா்.