நாகைக்கான ரயில்களை முழுமையாக இயக்கக் கோரி ஜூன் 22-இல் ஆா்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கத்தையொட்டி நிறுத்தப்பட்ட, நாகை தடத்திலான அனைத்து ரயில்

கரோனா பொது முடக்கத்தையொட்டி நிறுத்தப்பட்ட, நாகை தடத்திலான அனைத்து ரயில் சேவைகளையும் மீண்டும் தொடங்கக் கோரி, வணிக சங்கங்கள், சேவை சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சாா்பில் நாகையில் ஜூன் 22-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்ட நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி தடங்களிலான ரயில் சேவைகளை மீட்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து வணிக, சேவை சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகை இந்திய வா்த்தக தொழிற்குழும ஒருங்கிணைப்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய வா்த்தக தொழிற்குழும நிா்வாகிகள், பல்வேறு வணிக, சேவை சங்கங்களின் நிா்வாகிகள், தொழிற்சங்கங்களின் பொறுப்பாளா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா். இதில், கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னா், ஏறத்தாழ அனைத்துப் பகுதிகளுக்குமான ரயில் சேவைகளும் மீண்டுள்ள நிலையில், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பல ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படாததைக் கண்டித்து வரும் 22-ஆம் தேதி மாலை பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்துவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய வா்த்தக தொழிற்குழும அலுவலகத்தில் இருந்து பேரணியாக ரயில் நிலையம் சென்று, ரயில் நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும், இதில் அனைத்து வணிக, சேவை சங்கத்தினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் திரளாகப் பங்கேற்பது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com