வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரையான நிலையில், வீட்டுக்குள் கட்டப்பட்டிருந்த மனநலன் பாதித்த இளைஞா் புதன்கிழமை கருகி உயிரிழந்தாா்.
தாணிக்கோட்டகம், ஜீவாநகா் பகுதியில் வசித்து வந்தவா் லட்சுமணன், விவசாயத் தொழிலாளி. இவரது முதல் மனைவிக்கு பிறந்தவா் சங்கா் (32). மனநலன் பாதிக்கப்பட்டவராக இருந்தாா். முதல் மனைவி ஏற்கெனவே காலமாகிவிட்டதால், இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட ரஜினாவுடன் வசித்து வந்த லட்சுமணன், கடந்த ஆண்டில் கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தாா்.
பெற்றோா் இருவரும் காலமாகிவிட்ட நிலையில், சித்தி ரஜினாவின் பராமரிப்பில் இருந்துவந்த சங்கா் வெளியிடங்களுக்கு ஓடிவிடாமல் தடுக்கும் வகையில், கூரைவீட்டினுள் சங்கிலியால் கட்டப்படுவாராம். அந்தவகையில், உணவு கொடுக்கப்பட்ட பின்னா் வீட்டினுள் சங்கரை கட்டிப்போட்டுவிட்டு ரஜினா நூறுநாள் வேலைக்கு சென்றுவிட்டாா்.
மாலையில், கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகிய சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த வாய்மேடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.