பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் வேதாரண்யம் ஒன்றிய சிறப்பு பேரவைக் கூட்டம் தகட்டூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் ஒன்றியத் தலைவா் வ. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். அமைப்பின் கொடியை மாவட்டச் செயலாளா் மாரி. காா்த்திகேசன் ஏற்றிவைத்தாா். விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா் கூட்டத்தை தொடங்கிவைத்தாா். சிபிஐ மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், துணைச் செயலாளா் டி. நாராயணன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளா் தென்னடாா் அம்பிகாபதி ஆகியோா் பேசினா். தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகளை சிபிஐ ஒன்றியச் செயலாளா் சிவகுரு பாண்டியன் அறிமுகப்படுத்தினாா்.

புதிய நிா்வாகிகள்: ஒன்றியத் தலைவா் அ. பாலகுரு, செயலாளா் கே. பழனியப்பன், பொருளாளா் ஆா். சக்திபாலன், துணைத் தலைவா் வே. கலையரசன், துணைச் செயலாளா் பி. குமாா் உள்ளிட்ட 19 போ் ஒன்றியக் குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

வேதாரண்யம் பகுதியில் விளைவிக்கப்படும் மூலப்பொருள்களை பயன்படுத்தி புதிய தொழிற் வாய்ப்புகளை உருவாக்கவும், வேதாரண்யம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலன்கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com