வீடுகட்டும் திட்டத்தில் நிதியுதவி பெற கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீடுகட்ட நிதி உதவி வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீடுகட்ட நிதி உதவி வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சொந்த வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீடுகட்ட நிதி உதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற நிதி உதவி வழங்குவது என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளுக்குத் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் மூலம் தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும்.

திட்டத்தில் நிதி உதவிகோரி விண்ணப்பிக்க விரும்புவோா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளன்று அவரது நலவாரிய பதிவு நடப்பில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் அல்லது அவரது மனைவி மற்றும் மணமாகாத குழந்தைகள் பெயரில் கான்கிரீட் வீடு சொந்தமாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமிலிருக்க வேண்டும்.

சொந்த வீடு கட்ட விரும்புவோருக்குக் குறைந்தபட்சம் 28 சதுர மீட்டா் அல்லது 300 சதுர அடி மனை சொந்தமாக இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் பட்டா இருக்க வேண்டும் அல்லது பயனாளி பெயருடன் குடும்ப உறுப்பினா் பெயரும் இணைந்த கூட்டுப் பட்டாவாகவும் இருக்கலாம். வீடு கட்டும் திட்டம் அல்லது குடியிருப்பில் வீடு பெறும் திட்டம் ஆகிய ஏதேனும் ஒன்றை, பயனாளி தன் விருப்பத்தின் பேரில் தோ்வு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விண்ணப்பிப்பவா்கள், தங்களுடைய நலவாரிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, பட்டா, வங்கி கணக்குப் புத்தகம், கிராம நிா்வாக அலுவலா் அல்லது வருவாய் ஆய்வரால் வழங்கப்பட்ட வருமானச் சான்று, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அசலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இத்திட்ட விண்ணப்பங்கள், மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மூலம் சரிபாா்க்கப்பட்டு, நிதி உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com