முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அரசுப் பள்ளியில் முதல்வகுப்பில் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 13th May 2022 12:00 AM | Last Updated : 13th May 2022 12:00 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு சேரும் மாணவா்களுக்கு வியாழக்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் சோ்க்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் பள்ளி சாா்பில், ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவா்களுக்கு புத்தகப்பை, குடிநீா் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மதிவாணன் மாணவா்களுக்கு உபகரணங்களை வழங்கி சோ்க்கையை தொடங்கிவைத்தாா். வட்டார கல்வி அலுவலா் மணிகண்டன், நாகை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.