முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
நாகையில் திடீா் மழை
By DIN | Published On : 13th May 2022 12:00 AM | Last Updated : 13th May 2022 12:00 AM | அ+அ அ- |

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் மழை பெய்தது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த அசானி தீவிர புயல் வலுவிழந்ததன் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வியாழக்கிழமை பிற்பகலில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சில நிமிடங்கள் நல்ல மழை பெய்தது. பிற்பகல் சுமாா் 4.15 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை சுமாா் 15 நிமிடங்கள் பெய்தது. பின்னா், லேசான சாரல் மழை நீடித்தது. இதனால், இரவு நேரத்தில் நாகையில் வெப்ப நிலை குறைந்திருந்தது.