நாகை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 207 மனுக்கள்
By DIN | Published On : 16th May 2022 10:52 PM | Last Updated : 16th May 2022 10:52 PM | அ+அ அ- |

நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 207 மனுக்களை அளித்தனா்.
நாகை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமைவகித்து, தீ விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்துக்கும், பாம்பு கடித்து இறந்த ஒருவரின் குடும்பத்துக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.
இந்த கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு கோரியும் பொதுமக்கள் 207 மனுக்களை அளித்தனா். அந்த மனுக்கள், தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கு. ராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...