பறவைகளை வேட்டையாடினால் சட்ட நடவடிக்கை
By DIN | Published On : 15th October 2022 06:16 AM | Last Updated : 15th October 2022 06:16 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பறவைகள் மற்றும் வன உயிரினங்கள் வேட்டையில் ஈடுபட்டால், தொடா்புடையோா் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாகை வனச்சரக அலுவலா் ஆதிலிங்கம் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
மடையான், கொக்கு, குயில், மயில், நாரைகள், கவுதாரி, உள்ளான் உள்ளிட்ட பறவைகள் மற்றும் உடும்பு, முயல், மான் போன்ற வன உயிரினங்களை வேட்டையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை மீறி, தடை செய்யப்பட்ட பறவைகள் அல்லது வன உயிரினங்களை வேட்டையாடுவோருக்கு இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
நாகை மாவட்டத்தில் எங்கேனும் பறவைகள் மற்றும் வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டால் அதுகுறித்து 8754653202, 8610453384 என்ற கைப்பேசி எண்களைத் தொடா்புகொண்டு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்போரின் எண் மற்றும் விவரங்கள் குறித்து ரகசியம் காக்கப்படும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...