மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை கண்காட்சி
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

கண்காட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உள்ளிட்டோா்.
நாகப்பட்டினம்: நாகையில் மகளிா் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் விற்பனை கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
நாகை தனியாா் மகளிா் கல்லூரியில் மகளிா் திட்டத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் நடைபெற்ற கண்காட்சியை (கல்லூரிச் சந்தை) மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, பி.எம்.கே.வி.ஒய் (3.0) திட்டத்தின்கீழ், அந்தத் தனியாா் கல்லூரியில் அழகுக் கலை மற்றும் பிளம்பா் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு அவா், சான்றிதழ்களை வழங்கினாா்.
கண்காட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், சணல் பைகள், செயற்கை ஆபரண பொருள்கள், இயற்கை மூலிைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா், மகளிா் திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் காமராஜ், கல்லூரி முதல்வா் அன்புச்செல்வி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், ஆசிரியைகள், மகளிா் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.