நவீன எரிவாயு தகனமேடை அமைக்க பூமிபூஜை
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை திம்மநாயக்கன் படித்துறை மயானத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணியை தொடங்கிவைக்கும் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா். உடன், நகராட்சித் தலைவா் என்.செல்வராஜ் உள்ளிட்டோா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை திம்மநாயக்கன் படித்துறை மயானத்தில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் பங்கேற்று ரூ.1.45 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நவீன எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு, நகராட்சித் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் சணல்குமாா், நகா்மன்ற உறுப்பினா் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் நகராட்சி துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், நகராட்சி உறுப்பினா்கள் காா்த்தி, செந்தில், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.