நாகப்பட்டினம்: நாகை ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலில் மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் அருகே உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜை ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 3 நாள்களாக யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை 5 மணிக்கு கோபூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் 5-ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. இப்பூஜைகள் நிறைவுபெற்றதும், 6- மணிக்கு கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னா், 7 மணியளவில் நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலின் விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கும், 7.30 மணியளவில் மூலவா் ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் சந்நிதிக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து, சௌந்தரராஜப் பெருமாள், நவநீத கிருஷ்ணசுவாமி கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.