

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் முக்கூட்டு முத்து முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 29- ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை நான்காம் கால யாக பூஜைகள் நிறைவு பெற்றதும் பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி கோயிலின் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், முத்து முனீஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.