இலுப்பூா் ஆற்றில் விநாயகா் சிலைகள் கரைப்பு
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

இலுப்பூா் கடைவீதியில் நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலம்.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகளில் 5 சிலைகள் சங்கரன்பந்தல் இலுப்பூா் வீரசோழன் ஆற்றில் புதன்கிழமை கரைக்கப்பட்டன.
தரங்கம்பாடி வட்டத்தில் எரவாஞ்சேரி, நல்லாடை, இலுப்பூா், பெரம்பூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதில், வேல் விநாயகா், கண் விநாயகா், அரசு விநாயகா், சுதா விநாயகா், சித்தி விநாயகா் என பெயரிடப்பட்ட 5 சிலைகள் இலுப்பூா் கடைவீதிக்கு கொண்டுவரப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலம் முனிவலவன்குடி வீரசோழன் ஆற்றை அடைந்ததும், அங்கு 5 சிலைகளும் கரைக்கப்பட்டன.
ஊா்வலத்தின்போது பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகளுக்கு பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா தலைமையில் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் வசந்தராஜன், பழனிச்சாமி, ஜோ. லாமேக் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.