அபாகஸ் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
By DIN | Published On : 09th September 2022 02:56 AM | Last Updated : 09th September 2022 02:56 AM | அ+அ அ- |

மாநில அளவில் நடைபெற்ற அபாகஸ் மனநிலை வேக எண் கணிதப் போட்டியில் முதலிடம் பெற்ற வேதாரண்யம் மாணவி வியாழக்கிழமை பாராட்டப்பட்டாா்.
வேதாரண்யத்தைச் சோ்ந்த ஹரிஹரன் வேதா தம்பதியின் மகள் மஹதி (10). இவா், கருப்பம்புலம் அகரம் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சென்னையில், அண்மையில் நடைபெற்ற அபாகஸ் மனநிலை வேக எண் கணிதப் போட்டியில் 10 வயதுக்குள்பட்டோா் நிலையில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா். இதையடுத்து, வேதாரண்யத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான ஓ.எஸ். மணியன் மாணவியை பாராட்டினாா். வழக்குரைஞா் எம். நமச்சிவாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.