முத்துகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 09th September 2022 02:55 AM | Last Updated : 09th September 2022 02:55 AM | அ+அ அ- |

திருக்கடையூா் அருகே இராதா நல்லூா் தோட்டம் முத்துகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் முடித்து கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, கும்பாபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்ததை தொடா்ந்து பூா்ணாஹூதி, மகா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எதுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, முத்துகாளி அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.