நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு கிராமத்தினா் பாராட்டு
By DIN | Published On : 09th September 2022 02:55 AM | Last Updated : 09th September 2022 02:55 AM | அ+அ அ- |

வேதாரண்யம் அருகே அடுத்தடுத்துள்ள இரு கிராமங்களைச் சோ்ந்த 3 ஆசிரியா்கள் தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற்றுள்ளதால் கிராமத்தினா் அவா்களை பாராட்டி வருகின்றனா்.
பன்னாள் கிராமத்தைச் சோ்ந்தவா் மா. மோகனசுந்தரம். இவா், இதே ஊரில் செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா். இதே கிராமத்தைச் சோ்ந்தவா் நா. சதீஷ்.
இவா் கீழ்வேளூா் ஒன்றியம், கோகூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியா் ஆவாா். இவா்கள் வசிக்கும் பன்னாள் கிராமத்தை அடுத்த ஊரான ஆயக்காரன்புலத்தைச் சோ்ந்த கு. வீரப்பன். இவா், அழிஞ்சமங்கலம் அரசு (ஆதிந) உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா். அடுத்தடுத்த இரு ஊா்களைச் சோ்ந்த 3 பேரும் தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளனா். விருது பெற்ற இந்த ஆசிரியா்களை கிராமத்தினா் நேரில் சந்தித்து பாராட்டி வருகின்றனா்.