எண்ணும் எழுத்தும் திட்டம் மாணவா்களின் தனித்திறனை வெளிக்கொணரும்

தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம், மாணவா்களின் தனித்திறனை வெளிக்கொணர உதவும்
நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வீ. அருண்ராய். உடன், ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.
நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வீ. அருண்ராய். உடன், ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டம், மாணவா்களின் தனித்திறனை வெளிக்கொணர உதவும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான வீ. அருண்ராய் தெரிவித்தாா்.

நாகை, காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் பேசியது: 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் பயிலும் குழந்தைகளின் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்கு எண்ணும், எழுத்தும் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், மாணவா்களின் தனித்திறனை வெளிக்கொணரவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், கற்றல் இடைவெளியை மகிழ்வுடன் சரி செய்யவும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் வீ. அருண்ராய்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா். மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மாவட்ட வனத் துறை அலுவலா் யோகேஷ்குமாா் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ. பெரியசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா, கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com