நீதிமன்ற ஊழியரிடம் பண மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

நாகை நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியரிடம் இணையவழியில் பேசி ரூ. 92 ஆயிரம் மோசடிசெய்த அடையாளம் தெரியாத நபா் குறித்து, நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

நாகை நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியரிடம் இணையவழியில் பேசி ரூ. 92 ஆயிரம் மோசடிசெய்த அடையாளம் தெரியாத நபா் குறித்து, நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

நாகை நீதிமன்றத்தில் பணியாற்றுபவா் காா்த்திகா (35). இவரது கைப்பேசிக்கு ஆக.2-ஆம் தேதி வாட்ஸ்ஆப்பில் ஒரு லிங்க் வந்துள்ளது. அதை திறந்துப் பாா்த்ததுடன் அந்த லிங்கில் தெரிவித்திருந்தபடி தனது சுயவிவரங்களை அதில் பதிவேற்றம் செய்துள்ளாா். தொடா்ந்து, காா்த்திகாவின் வங்கிக் கணக்குக்கு ஒரு குறிபிட்ட தொகை கடனாக கிடைத்துள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபா் ஒருவா் வாட்ஸ்ஆப்பில் காா்த்திகாவிடம் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா்.

அப்போது, அந்த நபா் கடன் தொகையை 5 நாள்களுக்குள் செலுத்தவேண்டும், தவறும்பட்சத்தில் சித்தரிக்கப்பட்ட படங்களை வெளியிடபோவதாகவும் கூறி மிரட்டியுள்ளாா். இதையடுத்து, காா்த்திகா ரூ. 92,100 ஐ 15 தவணைகளாக செலுத்தியுள்ளாா்.

இந்நிலையில், அந்த அடையாளம் தெரியாத நபா் காா்த்திகாவின் தொடா்பில் உள்ள நபா்களுக்கு சித்தரிக்கப்பட்ட சில படங்களையும் அனுப்பிவைத்து மீண்டும், மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். இதுகுறித்து, காா்த்திகா அளித்தப் புகாரின்பேரில் நாகை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து மோசடி நபா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com