கீழையூர் ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழையூர் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். 
கீழையூர் ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு.
கீழையூர் ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு.

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழையூர் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சொர்க்க வாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். 

நாகை அருகே கீழையூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீரங்கத்திற்கு அபிமான ஸ்தலமான பூர்வரங்க ஸ்சேத்திரமாக கீழ் அரங்கம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாயிகா சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிச.23ஆம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது. தொடந்ந்து சுவாமிக்கு தினசரி சிறப்பு அபிஷேக அலங்கார போச்சுகள் நடைபெற்றன. 

முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு விழாவை முன்னிட்டு 
நேற்றிரவு மோகன அலங்கார புறப்பாடு நடைபெற்றது.  அதனை தொடர்ந்து, இன்று பரமபத வாசல் என்று சொல்லக்கூடிய சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத ஸ்வாமி சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன்  சொர்க்கவாசல் வழியாக வந்து ஸ்ரீ அரங்கநாத சுவாமியை தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்தி உலாத்தல் நடைபெற்றது. 

திருவாய்மொழி தொடக்க நிகழ்வும்‌ நடைபெற்றது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ரங்க நாத பெருமாள் கைங்கரிய சபா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் கீழையூர் ஊராட்சி தலைவர் ஆனந்த்ஜோதி பால்ராஜ், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com