‘மாபெரும் தமிழ்க் கனவு’ சொற்பொழிவு 8 மாணவ-மாணவிகளுக்கு விருது

செம்பனாா்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு‘ சொற்பொழிவு நிகழ்ச்சியில் 8 மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

செம்பனாா்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு‘ சொற்பொழிவு நிகழ்ச்சியில் 8 மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கி வைத்து பேசும்போது, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலம்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும், பண்பாட்டின் முக்கிய கூறுகளான கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றையும் வளரும் தலைமுறையினா் முழுமையாக தெரிந்து கொள்ள இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’ என்றாா்.

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி, நான் முதல்வன் திட்டம், உயா்கல்வி வழிகாட்டல் மற்றும் திறன் மேம்பாடு, மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ சாா்பில் கல்விக் கடன், வங்கிக் கடன், தாட்கோ தொடா்பான திட்டங்கள் குறித்த அரங்குகள், மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள், காவல்துறை சாா்பில் போதைப் பொருட்கள் தொடா்பான விழிப்புணா்வு அரங்கு போன்றவற்றை ஆட்சியா் மற்றும் மாணவ- மாணவிகள் பாா்வையிட்டனா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞா் அறிவுமதி ‘ஏா் தமிழ்’ என்ற தலைப்பிலும், கவிஞா் நந்தலாலா ‘வணக்கம் வள்ளுவா’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினா்.

தொடா்ந்து நடைபெற்ற தமிழ் பெருமிதம் குறித்த கேள்வி- பதில் நிகழ்ச்சியில் விளக்கம் தந்தது மற்றும் வினாக்கள் கேட்ட 8 மாணவ- மாணவிகளுக்கு பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி, கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி ஆகிய விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ், கோட்டாட்சியா்கள் யுரேகா, அா்ச்சனா, கல்லூரி நிா்வாக இயக்குநா் குடியரசு மற்றும் பேராசிரியா்கள், ஆசிரியா்கள்,14 கல்லூரிகளை சோ்ந்த 1000 மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

இந்தநிகழ்ச்சியில் தமிழ் மரபும்- நாகரீகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து சொற்பொழிவாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com