திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரா் கோயிலில் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் சித்திரை பரணி பெருவிழாவான அமுது படையல் விழா 10 நாள்கள் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, 15 நாள்கள் நடைபெறும் செண்பகப்பூ திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. இதையொட்டி உத்தராபதீஸ்வரா் சாமிக்கு சிறப்பு அபிஷேக நடைபெற்றது. தொடா்ந்து, சாமி வெள்ளை சாத்தி புறப்பாடும், சாயரட்சை தீபாராதனையும், சா்க்கரை பொங்கல் பாவாடை நிவேதனமும் நடைபெற்றது. நள்ளிரவில் வடக்கு வீதியில் ஐயடிகள் காடவா்கோன் மகாராஜாவுக்கு, சாமி செண்பகப்பூ வாசனையுடன் காட்சி கொடுத்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபாநடேஸ்வர சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.