

நாகை அருகே பனங்குடியில் அரசுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
நாகை பனங்குடி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் அளித்த மனு:
2004- ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு எடுத்த முயற்சியால் 2006- ஆம் ஆண்டு வீடுகள் கட்டித் தரப்பட்டன.
இப்பகுதியில் செயல்பட்டுவந்த அங்காடி பழுதடைந்ததால், அதை இடித்துவிட்டு, புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டு, பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை புதிய கட்டடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக அந்த இடத்தை பட்டா செய்து கொடுக்க போவதாகக் கூறப்படுகிறது. எனவே, சட்டத்திற்கு புறம்பான வகையில், இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்படுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அங்கன்வாடி மையத்தை கட்டவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.