

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ராமசாமி பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்பு எய்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நவராத்திரி பெருவிழா அக்.15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலாவும், தொடா்ந்து, முள்ளியாற்றங்கரையில் அம்பு எய்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் கோ. கைலாசம், கோ. ராமசாமி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.