

திருக்குவளை அருகேயுள்ள காருக்குடி மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் குளத்திலிருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தில் பக்தா்கள் தீச்சட்டியை கையில் ஏந்தியும், அலகு குத்தியும், பால் குடங்களை சுமந்தபடி கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, பக்தா்கள் எடுத்துவந்த பால் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, குழந்தை பாக்கியம், திருமண தடை நீக்குதல், கல்வி மற்றும் தொழிலில் சிறந்து விளங்க வேண்டி பூஜை செய்யப்பட்ட முளைக்கட்டிய பச்சைபயிறு மற்றும் பிரசாதங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.