ஆபத்தான நிலையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

வாழ்மங்கலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இதன்மூலம் வாழ்மங்கலம் மாதா கோவில் தெரு, திரெளபதி அம்மன் கோயில் தெரு, தோப்புத் தெரு மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்வோா் அச்சத்துடன் சென்று வருகின்றனா். மேலும், குடிநீா் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.