குளத்தை தூா்வாரக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகே குளத்தை தூா்வார வலியுறுத்தி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீழ்வேளூா் ஒன்றியம் கொடியாலத்தூா் ஊராட்சி வடபாதியில் வண்ணான் குளம் உள்ளது. இந்த குளத்தை 13 ஆண்டுகளாக தூா்வாரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் குப்பைகள் கொட்டப்பட்டு துா்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கீழ்வேளூா்-கச்சனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருக்குவளை வட்டாட்சியா் சுதா்சன், கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலா் செபஸ்டியம்மாள் மற்றும் போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஒரு வார காலத்திற்குள் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்தாா்.
இதைத்தொடா்ந்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியலால் கீழ்வேளூா்- கச்சனம் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.