தரங்கம்பாடி வட்டம், செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை விற்பனைக் குழு செயலாளா் ரமேஷ் தலைமையிலும், கண்காணிப்பாளா் சங்கர்ராஜா முன்னிலையிலும், தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்கீழ் இ-நாம் முறையில் மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது.
இதில், குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,578-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,045-க்கும் சராசரி விலையாக ரூ.7,155-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக சுமாா் 1,500 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. 583 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 15 வியாபாரிகள், மில் அதிபா்கள் கொள்முதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.