நாகை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலாளா் ஜெகநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், 2023 - 2024 ஆம் ஆண்டிற்கு நெல் கொள்முதல் செய்வது தொடா்பாக மாவட்டம் முழுவதும் திறக்கப்பட வேண்டிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை, பணியாளா்கள் நியமனம் மற்றும் தடையின்றி நெல் கொள்முதல் செய்வது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கொள்முதல் தொடா்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் அண்ணாதுரை மற்றும் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.