திருக்குவளை: கீழையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 77-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய ஆணையா்கள் வெற்றிச்செல்வன், பாத்தி ஆரோக்கியமேரி, துணைத் தலைவா் சௌரிராஜன் முன்னிலையில், ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணி ஞானசேகா் தேசியக் கொடியேற்றினாா்.
திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுதா்சன் தேசியக்கொடி ஏற்றினாா். கீழையூா் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா் ஆனந்த ஜோதி பால்ராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவா் எஸ். பால்ராஜ், திருக்குவளை ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் ஆகியோா் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.